www.TiruppurDistrict.com

Login Here


Home
திருப்பூர் மாவட்டம் ஒரு பார்வை

திருப்பூர் மாவட்டம் - Tiruppur District Map திருப்பூர் மாவட்டம் [Tiruppur District] 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவானது. இதன் தலைமையகம் திருப்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களை கொண்டு உருவாகி உள்ளது. இம்மாவட்டம், தமிழகத்தின் 32-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், நல்ல முன்னேற்றம் அடைந்த மாவட்டம் மட்டுமல்லது, தமிழகத்தின் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டம் ஆகும். இம்மாவட்டம், திருப்பூர் பனியன் ஆலை மற்றும் பருத்தி சந்தைக்கு மிகவும் பிரபலம். அதே போல் ஊத்துக்குளி வென்னை மிகவும் புகழ் பெற்றது ஆகும். திருப்பூர், பனியன் ஏற்றுமதிக்கு மிகவும் பெயர் பெற்ற மாவட்டம் ஆகும்.


திருப்பூர் மாவட்டம் [Tiruppur District] 7 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* திருப்பூர்                   - Tirupur
* அவினாசி                 - Avinashi
* பல்லடம்                  - Palladam
* உடுமலைப்பேட்டை - Udumalpet
* தாராபுரம்                  - Dharapuram
* காங்கேயம்              - Kangeyam
* மடத்துக்குளம்        - Madathukulam

திருப்பூர் மாவட்டம் [Tiruppur District]  உருவாகுவதற்கு முன்,

* திருப்பூர்                   - Tirupur
* அவினாசி                 - Avinashi
* பல்லடம்                  - Palladam                        மற்றும்
* உடுமலைப்பேட்டை - Udumalpet

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாலூக்காவாகவும்,

* தாராபுரம்                - Dharapuram                 மற்றும்
* காங்கேயம்             - Kangeyam

ஈரோடு மாவட்டத்தின் தாலூக்காவாகவும் இருந்தது, மடத்துக்குளம் [Madathukulam] தாலூக்கா, திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு உருவானது.

திருப்பூர் மாவட்டத்தில் [Tiruppur District] 19,17,033 பேர் உள்ளதாகவும், இதில் 7,76,802 பேர் ஆண்களும், 9,40,231 பேர் பெண்களும் உள்ளனர். நகரத்தில் 8,25,006 பேரும் கிராமப்புறத்தில் 10,92,027 பேரும் உள்ளனர். இங்கு தமிழ் அடிப்படை மொழியாய் இருப்பினும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் பேசுபவர்களும் உண்டு. இங்கு இந்து மதத்தவர்கள் 90.08% -மும், இஸ்லாமியர்கள் 5.33% -மும், கிறிஸ்தவர்கள் 4.35% -மும், மற்றவர்கள் 0.24% -மும் உள்ளனர். திருப்பூரில் [Tiruppur] அனைத்து மாநிலங்களிருந்தும் மக்கள் வந்து தங்கியுள்ளனர், இதற்கு விரைவான தொழிற்புரட்சியே காரணம்.


திருப்பூர் மாவட்டம் [Tiruppur District] தமிழகத்தின் மேற்கு மாவட்டமாக அமைந்துள்ளது. இம்மாவட்டம், தனது மேற்கு எல்லையை கோயம்புத்தூர் மாவட்டத்துடனும், வடக்கு மற்றும் வடகிழக்கில் ஈரோடு மாவட்டமும், கிழக்கில் கரூர் மாவட்டமும், தென்கிழக்கில் திண்டுக்கல் மாவட்டமும் உள்ளது. தெற்கில் கேரள மாநிலத்தின் (Kerala) இடுக்கி மாவட்டம் (Idukki District) உள்ளது. இம்மாவட்டம், 5,106.12 சதுர கி.மி. பரப்பளவு கொண்டுள்ளது ஆகும். இம்மாவட்டத்தில் தெற்க்கு மற்றும் தென்மேற்கிள் அதிக மழை பெறுகிறது, இதற்கு காரணம், இதை சுற்றி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்.

திருப்பூர் மாவட்டத்தில் [Tiruppur District] ஓடும் முக்கிய ஆறுகள், நொய்யல் மற்றும் அமராவதி ஆகும். அமராவதியே இம்மாவட்டத்தின், விவசாய நிலங்களுக்கு இன்றியமயாததாகும். அமராவதிநகரில் உள்ள அமராவதி நீர்த்தேக்கத்தில் இருந்து, அமராவதி அனை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில், திருமூர்த்தி அனை மற்றும் உப்பார் அனையும் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் [Tiruppur District] சுற்றுலாதலங்கள்

* அமராவதி அனை

* அமராவதி முதலைப் பூங்கா

* திருமூர்த்தி அனை

* பஞ்சலிங்கம் அருவி

* இந்திராகாந்தி வனவிலங்குகள் சரணாலயம்

 

Latest Info

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


 

Latest Info